இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் - திருக்கோயில்) - குடவாயில் பாலசுப்ரமணியன்;
சோழராஜன் அ
பெருமதிபிற்குரிய வரலாற்று ஆய்வாளர் தொல்லியல் வல்லுனர் தருமை ஆதினத்தால் "திருக்கோயில் கலைச்செல்வர் " என்று பட்டம் சூட்டப்பட்டவர் ஐயா. குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் .. குறிப்பாக சோழர்கள் வரலாற்றை சிறப்பாக ஆராய்ந்து பல கட்டுரைகளை எழுதியவர் ஐயா அவர்கள் ..
அவரது படைப்பில் வெளிவந்துள்ள வரலாறு மற்றும் கல்வெட்டு தொல்லியல் புத்தகம் தான் #இராஜேந்திர_சோழன் ஐயா அவர்களின் பல ஆண்டுகளா சோழர்கள் பற்றின தேடலும் உழைப்பும் தான் இன்று நம் கைகளில் பொன்னாக வைரமாக மிண்ணுகிறது ✨✨
இந்த நூல் திரிபுவன சக்கரவர்த்தி மாமன்னன் இராஜேந்திர சோழ தேவரின்
☀ வெற்றிகள்
☀ தலைநகரம்
☀ கட்டியெழுப்பிய திருக்கோவில்கள்
பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும் கொண்டது

இந்த புத்தகத்தை போன வாரம் www.vaaa.in என்ற தமிழ் புத்தகங்களுக்கான தனிச் சிறப்பு மிக்க இணைய நிறுவனத்தில் வாங்கினேன் .. அந்த நிறுவனத்திற்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் ..!🙏
நண்பர்களும் வாங்கி படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் ..!
https://www.vaaa.in/…/rajendra-cholan-kudavayil-balasubram…/
இராஜேந்திர சோழன்..
இராஜேந்திர சோழன்..
குடவாயில் பாலசுப்ரமணியன்...
Quick review ..
நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த நூல்..
எதிர்பார்ப்பு நிறைவேறியது.
இராஜேந்திரசோழனின் எந்தெந்த தரவுகள் வேண்டுமோ, அனைத்தும் கிடைத்தது.
தனது கால்நூற்றாண்டு தேடலே இந்நூல் என்கிறார் ஆசிரியர்..
உண்மைதான்.. அவரது உழைப்பின் பிரம்மாண்டம் தெரிகிறது.
இராஜேந்திர சோழனின் முழுத்தரவுகளையும் கொடுத்துவிட்டார்.
பஞ்சவன் மராயன் என்று அழைக்கப்பட்டவன் இராஜேந்திர சோழனே என்பதை உறுதிபடுத்தும் கிரங்கூர் கல்வெட்டு ஒரு புதியத் தரவாகும்.
( எனக்கு)
( எனக்கு)
பாலமூரி கல்வெட்டின் முழு சாசன பாடமும் விளக்கமும் உள்ளது.
ஹோட்டூர் கல்வெட்டில் வரும் நித்யவிநோத ராஜேம்ந்தர வித்யாதர சோழகுல திலகம் என்று குறிக்கப்படுபவர் இராஜேந்திரனே என்று இதுவரையில் வரலாற்று ஆசிரியர்கள் கூறினர்..
ஆனால் , இது ராஜேந்திரன் அல்ல. இது இராஜராஜன் என்று சரியான தரவுகளுடன் இந்நூலில் விளக்கமாகக் கூறியுள்ளது வரலாற்றுக்கு புதிய செய்தி..
இராஜேந்திரனின் மெய்கீர்த்தியில் காணப்படும் அனைத்துப்பகுதிகளையும் மிகச்சரியாக அடையாளம் கண்டு, அனைத்து இடத்திற்கும் களப்பயணம் சென்று, அந்தந்த இடத்தில் உள்ள கல்வெட்டுகளுடன் உறுதி செய்து Google map படமும் போட்டு...
Complete package ஆக தரவுகளாகத் தொகுத்துள்ளார்.
Complete package ஆக தரவுகளாகத் தொகுத்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள மகேந்திரகிரி கல்வெட்டு. இராஜேந்திரனின் வெற்றித்தூண். சாசனம்.புகைப்படம். அனைத்தும் பிரம்மாண்டத்தின் உச்சம்.
கடாரம் பற்றியத் தகவல்களும் அவசியமான ஒன்று.
இராஜேந்திரன் கங்கை நீரை எடுத்த இடமும் அடையாளம் தெரியவருகிறது.
பள்ளிப்படையான பழயாரை பஞ்சவன் மாதேவிச்சரம் கோவிலில் இராஜேந்திரனின் சிற்பம் என்பது வியப்புதான்.
இராஜேந்திர சோழன் வெளியிட்ட நாணயங்களின் தொகுப்பு அருமை என்றால்.. கங்கை கொண்ட சோழன் என்னும் எழுத்துப் பொறிப்புடன் கூடிய காசுகள் அருமையிலும் அருமை..
இராஜேந்திரனின் வாரிசுகள் பற்றிய முழு விபரம்..
ககைகொண்ட சோழபுரம்பற்றிய அனைத்து விபரங்கள்..
கோவிலின் வரலாறு, வரைபடம், சிற்பம், விளக்கம், அனைத்தும் முழுமை.
கோவிலின் வரலாறு, வரைபடம், சிற்பம், விளக்கம், அனைத்தும் முழுமை.
பிரிட்டிஷ் ஆவணகாப்பகத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தின் வாயிற்கோபுரத்தின் புகைப்படம் மிகவும் அபூர்வமான ஒன்று.
மொத்தத்தில்...
மிகச் சிறப்பான நூல்...
மிகச் சிறப்பான நூல்...
அன்புடன்
மா. மாரிராஜன்..
மா. மாரிராஜன்..
****************************************
இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் - திருக்கோயில்) - குடவாயில் பாலசுப்ரமணியன்; பக்.472; ரூ.750;
இராஜேந்திர சோழனின் வரலாற்றை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் விடுபட்டுப் போனவற்றை விரிவாக எழுதும் நோக்கில் இந்த வரலாற்று நூல் படைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இராஜ ராஜனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் (கி.பி.1012 - 1044) வரலாற்றை விரிவாக இந்நூல் கூறுகிறது. நூலின் முதல் பகுதியில் பிற்காலச் சோழர் மரபு பற்றி சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
முதலாம் ராஜேந்திரன் கி.பி.1012 இல் இளவரசனாகப் பொறுப்பேற்றிருக்கிறான். வடக்கே வங்காளதேசம் முதல் தெற்கே குடமலை நாடு வரை படையெடுத்துக் கைப்பற்றியிருக்கிறான். கடாரம் வென்ற சோழமன்னனும் இவனே. கடல் வழியாகச் சென்று லட்சத் தீவு, மாலத்தீவு ஆகியவற்றையும் கைப்பற்றியிருக்கிறான். இராஜேந்திர சோழன் வென்ற பகுதிகளைப் பற்றியும் அதற்கான ஆதாரங்களைப் பற்றியும் மிக விரிவாக இந்நூல் கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல், கங்கை கொண்ட சோழீச்சரம் உள்ளிட்ட பல கோயில்களை எழுப்பியிருக்கின்றான். ஏற்கெனவே உள்ள கோயில்களை புதுப்பித்திருக்கிறான். உதாரணமாக திருவொற்றியூர் ஆதி புரீஸ்வரர் திருக்கோயிலில் கருவறை அமைத்ததை, திருவாரூர் வீதிவிடங்கர் திருக்கோயில் செங்கல் கோயிலாக இருந்ததை கற்கோயிலாக மாற்றியதைக் கூறலாம்.

இராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வரி வசூலிப்பு, அதை பயன்படுத்திய முறை ஆகியவை பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
கி.பி.1024-25-இல் கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கியது, அதற்கான காரணங்கள், கங்கை கொண்ட சோழபுரத்தின் அமைப்பு ஆகியவை பற்றியும் கூறப்பட்டுள்ளன. இராஜேந்திர சோழனின் வரலாற்றை பல துல்லியமான சான்றாதாரங்களுடன் விளக்கும் அரிய முயற்சி இந்நூல். Thanks to Dinamani Tamil Newspaper
----
கி.பி.1024-25-இல் கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கியது, அதற்கான காரணங்கள், கங்கை கொண்ட சோழபுரத்தின் அமைப்பு ஆகியவை பற்றியும் கூறப்பட்டுள்ளன. இராஜேந்திர சோழனின் வரலாற்றை பல துல்லியமான சான்றாதாரங்களுடன் விளக்கும் அரிய முயற்சி இந்நூல். Thanks to Dinamani Tamil Newspaper
----
https://www.vaaa.in/…/rajendra-cholan-kudavayil-balasubram…/

Comments
Post a Comment